இஃது, உகரவீற்றுட் சிலமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.
(இ-ள்) சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகரவீற்றுச் சொல் அன்சாரியையொடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடும்-தான் பொருந்திய மெய்யை ஒழித்து உகரம்கெடும். எ - டு: அதனை, அதனொடு: இதனை, இதனொடு; உதனை,உதனொடு என ஒட்டுக. (4)
|