இதுவும் அது.
(இ-ள்) யா என் வினாவின் ஐ என் இறுதியும் - யா என்னும் வினாவினையுடைய ஐகாரவீற்றுச் சொல்லும், ஆ இயல் திரியாது என்மனார் புலவர் - மேற்கூறிய சுட்டுமுதல் ஐகாரம் போல வற்றுப் பெறும் இயல்பில் திரியாதென்று சொல்லுவர் ஆசிரியர், ஆ வயின் வகரம் ஐயொடும் கெடும் - அவ்விடத்து வகரம் ஐகாரத்தோடு கூடக் கெடும். எ - டு: யாவற்றை, யாவற்றோடு என ஒட்டுக. வகரம் வற்றின்மிசை ஒற்றென்று கெடுவதனை; ஈண்டுக்கேடோதியவதனால் பிற ஐகாரமும் வற்றுப் பெறுதல் கொள்க. கரியவற்றை, செய்யவற்றை என வரும். (6)
|