இஃது, உயிர்மெய்யுள் உயிரும்மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உயிர் - உயிர், மெய்யின் வழியது - மெய்களின் பின்னவாம், தோன்றும் நிலை - உயிர்கள் தோன்றும் நிலைமைக் கண். `தோன்றுநிலை' என்றதனான். உயிர்மெய்களைப் பிரிக்குமிடத்தும் கூட்டுமிடத்தும் அவ்வாறே முன்னும் பின்னும் ஆதலைக் கொள்க. மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெறநிற்குமென்றமையால், அக்கூட்டம் பாலும் நீரும்போல உடன்கலந்ததன்றி, விரல்நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறுநின்று கலந்தன வல்ல என்பது பெறுதும், ஈண்டு வேற்றுமைநயம் கருதப்பட்டது. (18)
|