இஃது, அகர ஆகாரவீற்றுட் சில மொழிக்கு உருபின்கண் எய்தியதன் மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு - அ ஆ என்று சொல்லப்படும் மரத்தை உணரநின்ற பெயராகிய சொற்கு, அத்தொடும் சிவணும் ஏழன் உருபு - முன்கூறிய இன்னொடன்றி அத்தோடும் பொருந்தும் ஏழாம் உருபு. எ - டு: விளவத்துக்கண், பலாவத்துக்கண் என வரும். (9)
|