2. மெய்யீறுகள்

ஞ, ந மெய் ஈற்றுக்கு இன்னே சாரியை

183.ஞ ந என்புள்ளிக்கு இன்னே சாரியை.

இஃது, புள்ளியீற்று ஞகாரவீறும் நகாரவீறும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை - ஞ ந என்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வரும் சாரியை இன்சாரியை.

எ - டு: உரிஞினை, உரிஞினொடு; பொருநினை, பொருநினொடு என ஒட்டுக.

(10)