2. மெய்யீறுகள்

ஏனை வகர ஈற்றுக்கு இன்சாரியை

185.ஏனை வகரம் இன்னொடு சிவணும்.

இஃது, வகரவீற்றுள் ஒழிந்த வகரவீற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஏனை வகரம் இன்னொடு சிவணும் - ஒழிந்த வகரவீறு இன்சாரியையோடு பொருந்தி முடியும்.

எ - டு: தெவ்வினை, தெவ்வினொடு என ஒட்டுக.

மற்று இது உரிச்சொல்லன்றோவெனின், உரிச்சொல்லேயெனினும் படுத்தலோசையாற் பெயராயிற்றெனக் கொள்க.

(12)