2. மெய்யீறுகள்

மகர ஈற்றுக்கு அத்துச்சாரியை

186.மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை.

இஃது, மகரஈறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) மஃகான் புள்ளிமுன் அத்து சாரியை - மகரமாகிய புள்ளியீற்றுச் சொல்முன் வரும் சாரியை அத்துச் சாரியை.

எ - டு: மரத்தை மரத்தொடு என வரும்.

(13)