`நும்' என்னும் மகர ஈற்றுப்பெயர் சாரியை பெறாமை
இஃது, மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.
(இ-ள்) நும் என் இறுதி இயற்கை ஆகும் - நும் என்னும் மகரவீறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாய் முடியும்.
எ - டு: நும்மை, நும்மொடு என ஒட்டுக.