இஃது, குற்றியலுகர ஈற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) குற்றியலுகரத்து இறுதிமுன்னர் முற்றத் தோன்றும் இன் என் சாரியை- குற்றியலுகரமாகிய ஈற்றின் முன்னா முடியத்தோன்றும் இன் என் சாரியை. எ - டு: வரகினை, வரகினொடு; நாகினை, நாகினொடு என ஒட்டுக. `முற்ற' என்றதனால், பிறசாரியை பெறுவனவும் கொள்க, வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான் கரியதனை கரியதனொடு எனவரும். (23)
|