3. முற்றுகர குற்றுகர ஈறுகள்

சில குற்றுகர ஈறுகள் இரட்டி முடிதல்

197.நெட்டெழுத் திம்பர் ஒன்றுமிகத் தோன்றும்
அப்பான் மொழிகள் அல்வழி யான.

இஃது, அவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்குதல் நுதலிற்று.

(இ-ள்) நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத்தோன்றும்-நெட்டெழுத்தின் பின்னாக (இடை) இனவொற்று மிகத்தோன்றும், அப்பால் மொழிகள் அல்வழியான - அக் கூற்று மொழிகள் அல்லாத இடத்தின்கண்ணே.

அவ்வீறு இன்சாரியை பெறுவது ஆண்டாயின் பெறாது.

எ - டு: யாட்டை, யாட்டொடு என வரும்.

அப்பான் மொழிகளாவன கசதபக்கள். இவை இனவொற்று மிகாதென்று கொள்க.

`தோன்றும்' என்றதனான், உயிர்த்தொடர் மொழியும் இன்பெறாது இனவொற்று மிகுதல் கொள்க. முயிற்றை, முயிற்றொடு என வரும்.

(24)