இஃது, மேற்சாரியை விலக்கப்பட்டவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) அவைதாம் - மேற் சாரியை பெறாவென விலக்கப் பட்ட அவைதாம், இயற்கையவாகும் செயற்கைய என்ப - இயல்பாய் முடிதலையுடையவாகும் செய்தியையுடைய வென்று சொல்லுவர். எ - டு: யாட்டை, யாட்டொடு என ஒட்டுக. `செயற்கைய' என்றதனால்; இனவொற்று மிக்கன சிறுபான்மை இன்பெறுதலும் கொள்க. யாட்டினை, யாட்டினொடு, முயிற்றினை, முயிற்றினொடு என வரும். (25)
|