3. முற்றுகர குற்றுகர ஈறுகள்

குற்றுகர ஈற்று எண்ணுப் பெயர்க்கு அன்சாரியை

199. எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்.

இஃது, அவ்வீற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் - எண்ணுப் பெயர்களினது குற்றுகர வீறு அன்சாரியையொடு பொருந்தும்,

எ - டு: ஒன்றனை, ஒன்றனோடு; இரண்டனை, இரண்டனோடு என ஒட்டுக.1

(26)

1.முன்னர் செயற்கைய என்ற இலேசானே ஒன்றினை இரண்டினை என இன்சாரியையும் கொடுக்க. (நச்)