இதுவும் அது. மெல்லெழுத்து என்ப - மெல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர் , ங ஞ ண ந ம ன - ங ஞ ண ந ம ன என்னும் தனிமெய்களை. மெல்லென்று இசைத்தலானும் , மெல் என்ற மூக்கின் வளியாற் பிறத்தலானும் , மெல்லெழுத்து எனப்பட்டன. மொழிக்கு முதலாமெழுத்து மூன்று உளவாகலானும் அவற்றுள் வழக்குப் பயிற்சியானும் (மெல்லினம்) முதலாமெழுத்துச் சிறு பான்மை வழக்கினவாய் இரண்டாகிய இடையினத்தின்முன் வைக்கப்பட்டது. வன்மை மென்மை கூறலின் , எழுத்து அருவன்றி உருவாதல் பெறப்பட்டது. உயிருக்கும் குறுமை நெடுமை கூறலின் , உருவென்பது பெறுதும். (20)
|