1. அகர ஈறு

சுட்டின் முன் யவ மெய்

207.யவ முன் வரினே வகரம் ஒற்றும்.

இஃது, சுட்டு இடைக்கணத்தோடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) யவமுன் வரின் வகரம் ஒற்றும்- யகரம் வகரம் முதல்மொழியாகச் சுட்டின் முன்னே வரின் இடைக்கண் வகரம் ஒற்றும்.

எ - டு: அவ்யாழ், அவ்வளை என வரும்.1

(4)

1. வருமொழி முற்கூறியவதனால் அகரந் தன்னை யுணர நின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும்.(நச்சி)