1. அகர ஈறு

சுட்டின் முன் உயிர்

208.உயிர்முன் வரினும் ஆஇயல் திரியாது.

இஃது, அச்சுட்டு உயிர்க்கணத்தோடு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) உயிர் முன் வரினும் ஆ இறல் திரியாது- உயிர் முதல்மொழி அகரச் சுட்டின் முன்னர் வரினும் மேற்கூறிய வகரம் மிக்கு முடியும் அவ்வியல்பில் திரியாது.

எ - டு: அவ்வாடை, அவ்வாண்டை என ஒட்டுக.

இடைமிக்க வகரத்தினை "நெறியியல்" என்ற இலேசினான் இரட்டுதல் கூறினமையின், அது நிலை மொழி தொழிலென்பதுவே கூறப்பட்டது. `திரியாது' என்றதனானே, மேற்சுட்டு நீண்ட வழி யகரத்தோடு கொள்க.

(5)