1. அகர ஈறு

செய்யுளில் சுட்டு நீளுதல்

209.நீட வருதல் செய்யுளுள் உரித்தே.

இஃது அச்சுட்டுச் செய்யுள் முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) நீட வருதல் செய்யுளுள் உரித்து- அகரச்சுட்டிற்கு நீளும்படியாக வருதல் செய்யுளிடத்து உரித்து.

எ - டு: "ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே" (கிளவி யாக்கம்-1) என வரும்.

வருமொழி வரையாது கூறினமையின் , இம் முடிபு வன்கண மொழிந்த கணமெல்லாவற்றோடும் சென்றது. உதாரணம் பெற்றவழிக்கொள்க.

(6)