நூன்மரபு

4.வடிவு

இடையினமெய்

21.இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள.

இதுவும் அது.

இடையெழுத்து என்ப - இடையெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர் , ய ர ல வ ழ ள - ய ர ல வ ழ ள என்னும் தனிமெய்களை.

இடைநிகரவாகி ஒலித்தலானும். இடைநிகர்த்தாய மிடற்றுவளியாற் பிறத்தலானும் இடையெழுத்து எனப்பட்டது.

(21)