மரப் பெயர்க்குப் பிறிதுவிதி
இஃது, அகரவீற்று மரப்பெயர்க் கிளவிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.
(இ-ள்) மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகும்-அகரவீற்று மரப்பெயராகிய சொல் மெல்லெழுத்து மிக்கு முடியும்.
எ - டு: விளங்கோடு, விளஞ்செதிள், தோல், பூ என வரும்.