1. அகர ஈறு

அகர ஈற்றுப் பன்மைச் சொற்கள்

221.பலவற் றிறுதி உருபியல் நிலையும்.

இஃது, அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) பலவற்று இறுதி உருபு இயல் நிலையும் - பல என்னும் அகரவீற்றுச்சொல் உருபு புணர்ச்சிக்கண் வற்றுப் பெற்றுப் புணர்ந்த இயல்பின் கண்ணே நிற்கும்.

எ - டு: பலவற்றுக்கோடு; செவி, தலை, புறம் என வரும்.

(18)