இஃது, ஆகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஆகார இறுதி அகர இயற்று - ஆகாரவீற்றுப் பெயர் (அல்வழிக்கண் ) அகரவீற்று அல்வழியது இயல்பிற்றாய் வல்லெழுத்துப் பெற்று முடியும். எ - டு: தாராக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். (19)
|