இஃது, அவ்வீற்று வினைச்சொல் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) செய்யா என்னும் வினைஎஞ்சு கிளவியும்-[பெயரேயன்றி] செய்யா என்று சொல்லப்படும் ஆகாரவீற்று வினையெச்சச்சொல்லும், அ இயல் திரியாது என்மனார் புலவர்-வல்லெழுத்து மிக்குமுடியும் அவ்வியல்பில் திரியாதென்று சொல்லுவர் புலவர். எ - டு: உண்ணாக்கொண்டான்; சென்றான்; தந்தான், போயினான் என வரும். `திரியாது'1 என்றதனால், `செய்யா' என்னும் பெயரெச்சமும் அவ்வாறு முடியுமெனக் கொள்க. உண்ணாக்கொற்றன் என வரும். (20)
1. `உம்மை' யாற் பெயரெச்ச மறையாகிய சொல்லும். (நச்)
|