2. ஆகார ஈறு

வேற்றுமையில் ஆகார ஈறு

226.வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே.

இஃது, அவ்வீற்று வேற்றுமை கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - (ஆகாரவீற்றுப் பெயர் அல்வழிக்கண்ணேயன்றி) வேற்றுமைக் கண்ணும் அகரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்குமுடியும்.

எ - டு: தாராக்கால்; சிறகு , தலை , புறம் என வரும்.

(23)