இஃது, அவ்வகரப் பேற்றிற்கு ஒருவழி எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்) இரா என் கிளவிக்கு அகரம் இல்லை - இரா என்னும் ஆகாரவீற்றுச் சொல்லிற்கு முன்கூறிய அகரப்பேறு இல்லை. எ - டு: இராக்கொண்டான்1 என வரும். (25)
1. `இரா' என்னும் சொல் இரத்தல் என்னும் பொருள்பட்டு, வினையைக்குறிப்பின் அகரம் பெறும். இராவில் என்று பொருள் பட்டுக் காலத்தைக் குறிப்பின் அகரம் பெறாது.(பாவாணர்)
|