இஃது, அவ்வீற்று ஒருவழி அகரம் விலக்கி அத்து வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) நிலா என் கிளவி அத்தொடு சிவணும் - நிலா என்னும் சொல் அத்துச் சாரியையோடு பொருந்தி முடியும். எ - டு: நிலாத்துக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். `நிலைமொழித்தொழிலை நிலைமொழித் தொழில்1 விலக்கு மாகலின்' அத்து வகுப்ப அகரம் வீழ்ந்தது. (26)
1. நிலைமொழித்தொழில், அத்துப்பேறு, நிலைமொழித் தொழிலை விலக்கல், 24 ஆம் நூற்பாவில் விதித்த அகரத்தை விலக்கல்.
|