இஃது , அவ்வீற்றுள் ஆ என்றதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஆன்ஒற்று அகரமொடும் நிலைஇடன் உடைத்து - முன்பு பெற்றுநின்ற ஆன் என்னும் சொல்லினது னகரவொற்று அகரத்தொடும் நிற்கும் இடனுடைத்து. `இடனுடைத்து' என்றதனான் , வன்கணம் ஒழிந்தகணத்து இம் முடிபெனக் கொள்க. எ - டு: "ஆனநெய்தெளித்து நான நீவி" என வரும் . `அகரமொடும்' என்ற உம்மையான் , அகரமின்றி வருதலே பெரும்பான்மை எனக் கொள்க. (30)
|