இஃது , இன்னும் ஆன் என்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) ஆன்முன் வரும் ஈகார பகரம் - ஆன் என்னும் சொல் முன்னர் வருமொழியாய் வருகின்ற ஈகாரத்தொடு கூடிய பகரமாகிய மொழி , தான்மிகத் தோன்றி குறுகலும் உரித்து - அப் பகரமாகிய தான் மிகத் தோன்றி அவ் வீகாரம் இகரமாகக் குறுகி முடிதலையும் உடைத்து . `தோன்றி' என்றதனால் , நிலைமொழிப்பேறாகிய னகர வொற்றின் கேடு கொள்க. எ - டு: ஆப்பி என வரும் . உம்மையான் , ஆன்பீ என்பதே பெரும்பான்மையெனக் கொள்க. (31)
|