இஃது, இகரவீற்றுப் பெயர்க்கு அல்வழி முடிபு தொகை மரபினுட் கூறி நின்றமையின் அதன் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் - இகரவீற்றுப் பெயர்ச்சொல் முன்னர் அதிகாரத்தாற் க ச த ப முதல்மொழி வந்தவழி வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்குமுடியும். எ - டு: கிளிக்கால் ; சிறகு ; தலை , புறம் என வரும் . (33)
|