இஃது, இவ்வீற்று மரப்பெயர் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று. (இ-ள்) உதிமரக்கிளவி மெல்லெழுத்து மிகும் - உதி என்னும் மரத்தினை உணரநின்ற சொல் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும். எ - டு : உதிங்கோடு ; செதிள் , தோல் , பூ1 என வரும் . (41) 1.அம்முச்சாரியை விதிக்கின்ற புளி மரத்தினை இதன்பின் வைத்தமையான் உதியங்கோடு என இதற்கும் அம்முப் பெறுதல் கொள்க . இக்காலத்து ஒதியென மருவிற்று.
|