இஃது, இவ்வீற்று மரப்பெயர் ஒன்றற்கு மேல் எய்திய வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதித்தல் நுதலிற்று. (இ-ள்) புளிமரக்கிளவிக்கு சாரியை அம்-புளி என்னும் மரத்தினை உணர நின்ற சொல்லிற்கு வரும் சாரியை அம்முச்சாரியை. எ - டு : புளியங்கோடு , செதிள், தோல், பூ என வரும் . சாரியைப்பேற்றிடை எழுத்துப்பேறு கூறியவதனால் , அம்முப்பெற்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (42)
|