3. இகர ஈறு

`புளி' என்னும் சுவைப்பெயர்

246.ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே.

இஃது, அம் மரப்பெயரல்லாத புளிப்பெயர்க்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஏனை புளிப்பெயர் மெல்லெழுத்துமிகும் - அம்மரப் பெயரன்றி ஒழிந்த சுவைப்புளி உணரநின்ற பெயர் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும்.

எ - டு : புளிங்கூழ் ; சோறு , தயிர் பாளிதம்1 என வரும் .

(43)

1.பாளிதம் - பாற்சோறு .