இஃது , இவ்வீற்றுட் சிலவற்றிற்குச் சாரியை விதித்தல் நுதலிற்று. (இ-ள்) நாள் முன் தோன்றும் தொழில்நிலை கிளவிக்கு இகரவீற்றுள் நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றும் வினைச்சொல்லிற்கு , ஆன்இடை வருதல் ஐயம் இன்று - ஆன்சாரியை இடைவந்து முடிதல் ஐயம் இல்லை . எ - டு : பரணியாற் கொண்டான் ; சென்றான் , தந்தான் , போயினான் என வரும் . `ஐயமின்று' என்றதனான் , இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (45)
|