திங்கட் பெயர்
இதுவும் அது.
(இ-ள்) திங்கள் முன் வரின் சாரியை இக்கு - திங்களை உணர நின்ற இகரவீற்றுப் பெயர் முன்னர்த் தொழில்நிலைக் கிளவி வரின் வரும் சாரியை இக்குச் சாரியை.
எ - டு : ஆடிக்குக் கொண்டான் ; சென்றான் , தந்தான் , போயினான் என வரும் .