நூன்மரபு

5. மயக்கம்

25.ஙஞண நமன வெனும் புள்ளி முன்னர்த்
தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே.

இதுவும் அது.

ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் - ங ஞ ண ந ம ன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர், தத்தம் மிசைகள் ஒத்தன-(நெடுங்கணக்கினுள்) தத்தமக்கு மேல் நிற்கும் எழுத்தாகிய க ச ட த ப றக்கள் பொருந்தின, நிலை - மயங்கி நிற்றற்கண்.

எ - டு: தெங்கு, மஞ்சு, மண்டு , பந்து, கம்பு, கன்று என வரும்.

(25)