இஃது, ஈகார வீற்றுப்பெயர் அல்வழியின்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஈகார இறுதி ஆகார இயற்று - ஈகார வீற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகாரவீற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வரும்வழி வல்லெழுத்து மிக்குமுடியும். எ - டு : தீக்கடிது ; சிறிது , தீது , பெரிது என வரும் . (47)
|