இஃது, மேற்கூறியவற்றுள் மீ என்பதற்கு வேறொரு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் உடன்நிலைமொழியும்உள என மொழிப - இடத்தினை வரைந்துணர்த்தும் மீ என்னும் சொல்முன் இயல்பாய் முடிதலேயன்றி வல்லெழுத்து மிக்குமுடியும் தம்மில் இயைந்து நிற்றலையுடைய மொழிகளும் உளவென்று சொல்லுவர். எ - டு : மீக்கோள், மீப்பல் என வரும். `உடனிலை' என்றதனால், மீங்குழி, மீந்தோல் என மெல்லெழுத்துப் பெற்று முடிவனவும் கொள்க. (49)
|