5. உகர ஈறு

அல்வழியில் உகர ஈற்றுப் பெயர்

255.உகர இறுதி அகர இயற்றே.

இஃது, உகரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) உகர இறுதி அகர இயற்று - உகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்குமுடியும்.

எ - டு : கடுக்குறிது; சிறிது, தீது, பெரிது என வரும்.

(52)