இஃது, இவ்வீற்றுச் சுட்டு வன்கணத்தொடு கூடி முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும் - உகரவீற்றுச் சுட்டின்முன்னரும் வல்லெழுத்து வரும்வழி அவ் வகரவீற்று அல்வழியின் தொழிற்றாய் வல்லெழுத்து மிக்குமுடியும். எ - டு : உக்கொற்றன் ; சாத்தன், தேவன், பூதன் என வரும். (53)
|