5. உகர ஈறு

சுட்டின்முன் மென்கணம் முதலியன

257.ஏனவை வரினே மேல்நிலை யியல்பே.1

இஃது, அவ்வீற்றுச்சுட்டு ஒழிந்த கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஏனவை வரின் மேல்நிலை இயல்பு - உகரவீற்றுச் சுட்டின்முன் ஒழிந்த கணம் வருமொழியாக வரின் மேல் அகர வீற்றுச்சுட்டு முடிந்து நின்ற நிலைமையின் இயல்பையுடையவாய் முடியும்.

எ - டு : உஞ்ஞாண், உந்நூல், உம்மணி எனவும்; உவ்யாழ், உவ்வட்டு எனவும்; உவ்வடை, உவ்வாடை, உவ்வௌவியம் எனவும்; ஆவயினான எனவும் வரும்.

(54)

1. (பாடம்) இயல.(நச்.)