இதுவும் அது. அவற்றுள் - மேற்கூறப்பட்ட மெல்லெழுத்து ஆறனுள், ணனஃகான் முன்னர். ணகார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய (டறக்களே யன்றி) க ச ஞ ப ம ய வ என்று சொல்லப்படும் ஏழும் மயங்குதற்கு உரிய. எ - டு: வெண்கலம், புன்கண், வெண்சாந்து, புன்செய், வெண்ஞாண், பொன்ஞாண், வெண்பலி, பொன்பெரிது, வெண்மாலை, பொன்மாலை,மண்யாது, பொன்யாது, மண்வலிது, பொன்வலிது என வரும். (26)
|