6. ஊகார ஈறு

வேற்றுமையில் ஊகார ஈறு

267.வேற்றுமைக் கண்ணும் அதனோரற்றே.

இஃது, ஊகாரவீறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - ஊகார வீறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் அவ்ஆகார வீற்று அல்வழியோடு ஒத்த இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும்.

எ - டு : கொண்மூக்குழாம்; செலவு, தோற்றம், மறைவு என வரும்.

(64)