இஃது, இவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) குற்றெழுத்து இம்பரும் ஓர் எழுத்து மொழிக்கும் உகரக்கிளவி நிற்றல் வேண்டும்-குற்றெழுத்தின்பின் நின்ற ஊகாரவீற்றுமொழிக்கும் ஓரெழுத்தொரு மொழியாகிய ஊகாரவீற்று மொழிக்கும் உகரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும். எ - டு : உடூஉக்குறை, தூஉக்குறை, செய்கை, தலை, புறம் என வரும். `நிற்றல்' என்றதனால் இவ்வீற்று உயர்திணைப்பெயர் வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுவனவும் கொள்க. ஆடூஉக்கை, மகடூஉக்கை; செவி, தலை,புறம் என வரும். (65)
|