ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே.
இதுவும் அது.
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் - ஞ ந ம வ என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய்பெற்றன்று-யகரம் மயங்கி நிற்றல் பொருண்மை பெற்றது.
எ - டு: உரிஞ்யாது, பொருந்யாது, திரும்யாது, தெவ்யாது என வரும்.