இஃது, இவ்வீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று-ஏகாரவீறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் அவ் வூகாரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். எ - டு : வேக்குடம்1; சாடி, தூதை, பானை எனவரும். (74)
1. வேக்குடம் , வேதலையுடைய குடமென விரியும். (நச்.)
|