இஃது, அவ்வீற்றிற்கு எய்தியதன் மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஏ என் இறுதிக்கு எகரம் வரும்-அவ்வேற்றுமைக்கண் ஏ என்னும் இறுதிக்கு எகரம் வரும். எ - டு : ஏஎக்கொட்டில்; சாலை, துளை, புழை என வரும். 1`உரையிற்கோடல்' என்பதனான், அவ்வெகரப்பேறு பொருந்தின வழிக் கொள்க. (75)
1. வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக் கண்ணுமெனக் கொள்க. ஏஎ ஞெகிழ்ச்சி நேர்மை என வரும். (நச்.)
|