8. ஏகார ஈறு

சே என்னும் மரப்பெயர்

279.சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே.

இஃது, அவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று.

(இ-ள்) சே என் மரப்பெயர் ஒடு மர இயற்று - சே என்னும் மரத்தினை உணரநின்ற பெயர் ஒடுமரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும்.

எ - டு : சேங்கோடு; செதிள், தோல், பூ என வரும்.

(76)