இஃது, அம் மரப்பெயரல்லாத சே என்பதற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும் - மேற் கூறிய சே என்பது பெற்றத்தினை உணரநின்ற பொழுதாயின் முடிய இன்சாரியை பெற்று முடிய வேண்டும். எ - டு : சேவின்கோடு; செவி, தலை, புறம் என வரும். `முற்ற' என்றதனால் இச் சே என்பது எடுத்தோத்தான் இன் பெற்றவழியும், அதுவே மரப்பெயராய் உருபிற்கு எய்திய சாரியை பெற்றவழியும் பிறசொல் அவ்வாறு இன் பெற்ற வழியும் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. எ - டு : சேவின்கோடு; செவி, தலை, புறம் எனவும்; சேவின் கோடு செதிள், தோல், பூ எனவும்; ஏவின் கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். (77)
|