இதுவும் அது. (இ-ள்) பனையின் முன்னர் அட்டு வருகாலை - மேற் கூறிய வழியேயன்றிப் பனை என்னும் சொல்லின் முன்னர் அட்டு என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலை இன்றாகும் ஐ என் உயிர் - நிற்றல் இன்றாம் ஐ என்னும் உயிர்; ஆ வயின் ஆன ஆகாரம் வருதல் - அவ்விடத்து வந்து அம்மெய்ம்மேல் ஏறி முடிக. எ - டு : பனாஅட்டு என வரும். `ஆவயின்' என்றதனால், விச்சாவாதி என்றாற் போல்வன வற்றது வேற்றுமை முடிபு கொள்க. (82)
|