இஃது, இயைபு வல்லெழுத்தினோடு சாரியைப்பேறும் வல்லெழுத்து விலக்கிச் சாரியைப்பேறும் கூறுகின்றமையின் எய்தியதன் மேற் சிறப்பு விதியும் விலக்கிப் பிறிது விதியும் வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன-ஐகார வீற்றத் திங்களை உணர நின்ற பெயரும் அவ்வீற்று நாள் உணர நின்ற பெயரும் முன் இகரவீற்றுத் திங்களும் நாளும் கிளந்த தன்மையவாய் இருக்கும் ஆனும் பெற்று முடியும். எ - டு : சித்திரைக்குக் கொண்டான், கேட்டையாற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். நாள் முன்கூறாது திங்கள் முன்கூறியவதனால், கரியவற்றுக் கோடு எனவும்; அவையத்துக் கொண்டான் எனவும்; வழைங் கோடு எனவும்; கலைங்கோடு, கலைக்கோடு, எனவும்; இவ்வீற்று முடியாதனவெல்லாம் கொள்க. (84)
|