இஃது, இயைபு வல்லெழுத்தினோடு அத்துப்பேறும் வல்லெழுத்து விலக்கி இன்னும் வகுக்குக்கின்றமையின் எய்தியதன் மேற் சிறப்பும் எய்தியது விலக்கிப் பிறிதும் கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மழை என் கிளவி வளி இயல் நிலையும்- மழை என்னும் ஐகாரவீற்றுச்சொல் இகரவீற்று வளி என்னும் சொல் அத்தும் இன்னும் பெற்று முடிந்த இயல்பின் கண்ணே நின்று முடியும். எ - டு : மழையத்துக் கொண்டான், மழையிற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வரும். (85)
|