இஃது, அவ்வீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - ஓகார வீற்று வேற்றுமைக்கண்ணும் அவ்வோகார வீற்று அல்வழியோடொத்து வல்லெழுத்துப் பெற்றுப் புணரும். ஆவயின் ஆன ஒகரம் வருதல் - அவ்விடத்து ஒகரம் வருக. எ - டு : ஓஒக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை என வரும். (90)
|